என் உயிரே

உன்னையே,
யோசிக்கும் மனதையும்
நேசிக்கும் இதயத்தையும்

என்னை,
நெருக்கத்தில் ரசிக்கும்
உன் விழியையும்
உறைய செய்யும்
உன் முத்தத்தையும்

நெகிழ வைக்கும்
உன் ஸ்பரிசத்தையும்
சுவாசிக்க விரும்பும்
உன் மூச்சுக்காற்றையும்

கட்டி அனைக்கும்
உன் கரங்களையும்
தட்டிக்கொடுக்கும்
உன் பேச்சையும்

விட்டு கொடுக்காத
உன் உள்ளமும்
விடவே முடியாத
உன் எண்ணமும்

சேர்ந்து ரசிக்கும்
காட்சிகளையும்
சேராதபோது துடிக்கும்
நினைவுகளையும்

மழை துளிகளில்
நனைவதையும்
மனம் மகிழ்ந்து
கரைவதையும்

இருக்க அனைத்து
செல்லும் வாகனத்தையும்
இருக்கையில் அமர்ந்து
பறக்கும் வாலிபத்தையும்

குறையில்லா
ஆனந்தத்தையும்
கூடி வாழும்
பந்தத்தையும்

என்றும்
எதிர்பார்க்கும்
என்னை
ஏமாற்றாதே
என் உயிரே.

எழுதியவர் : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (19-Jan-14, 11:07 am)
Tanglish : en uyire
பார்வை : 315

சிறந்த கவிதைகள்

மேலே