புது விதி செய்வோம் முன்னுரை

முன்னுரை
தினசரி நாளிதழ்களில் பக்கத்திற்குப் பக்கம் பாலியல் வக்கிரச் செய்திகள் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இருந்தும் அரசும் சமுதாயமும் அதை முழுமையாக மட்டுப்படுத்தமுடியாத சூழலில் தான் உள்ளது
உலகிலேயே பாலுறவிற்கென ஒரு இலக்கியம் படைத்தவர்கள் நாம். காதல் புனிதமானது என்பதற்காகவும் அது தவிர்க்க இயலாதது என்பதற்காக ரதி,மன்மதன் என்ற கடவுளர்களையும் உருவாக்கி காதல் லீலைகளை சிற்பங்களாகவும் கஜூராஹோ கோவிலில் செதுக்கி வைத்தோம். முக்கிய கடவுளான சிவனே மன்மதனிடம் தோற்றுவிட்டதாகவும் கதைகள் சொன்னது நாம் தான். எனில் காதலுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்பதை அறியலாம்.
அரசாங்கம் சட்டமியற்றி இதைத் தடுத்துவிட முடியுமா ?
இதில் சமுதாயத்தின் பங்கு என்ன ?
இக் குற்றங்கள் நிகழத் தூண்டும் உளவியல் காரணிகள் எவை ?
இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தான் யாவை ?
இவையெல்லாம் இச்சீர்மிகு சமுதாயத்தின் முன் காலம் வைக்கும் கேள்விகள்
சட்டங்கள் இயற்றப்படும் ஒரு மாமன்றத்தில் மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதி நிர்வானப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்
மேதமை தாங்கிய பல உயர் மட்டப் பொறுப்பு வகித்த 80 வயது முதியவர் 20 வயது பெண்ணோடு சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்.
நாட்டின் உயிர் மூச்சு நீதிபதி மீது இக்குற்றம் சுமத்தப் படுகிறது
ஒருதலைக் காதல் அமிலம் வீசுகிறது.
அனாதை இல்லங்களில் ஆதரவுக் கரமே ஆபாசக் கரம் நீட்டுகிறது.
அலுவலகங்களில் அதிகாரிகள் ரூபத்தில் காமம் வலை வீசுகிறது, சம்மந்தப்பட்டவர்களின் இன்றி.
80 வயது கிழவியும் 5 வயது சிசுவுமே கற்பழித்துக் கொல்லப்படுகிறார்கள்.
இவையெல்லாமே பத்தரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக நாட்டு நடப்பாக நாம் அறிகிறோம்.
காந்தி சொன்ன சுதந்திரம் இன்னும் நம் சாலைகளுக்கே கிடைக்கவில்லை
இனியொரு சரிகா ஷா, ரீட்டா மேரி,பிரியங்கா, சோனாலிமுகர்ஜி வினோதினிக்களின்
அழுகுரலும் கதறலும் கேட்கத்தான் வேண்டுமா?
பாதிப்படைந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சமீபமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இப்பட்டியலில் அதிகம் சேரத் துவங்கி விட்டார்கள்.
அயர்லாந்து நாட்டில் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் வரிவிதிப்பு இல்லையாம். ஏன் தெரியுமா ? அவர்களின் எண்ணிக்கை மிகுந்தால் குற்றங்கள் குறையும் என்ற நம்பிக்கைதானாம். படைப்பாளிகள் மெல்லினத்தைச் சார்ந்தவர்கள். இந்த எழுத்து. காமில் 17 ஆயிரம் படைப்பாளிகள் உள்ளோம். சாதி, தீண்டாமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வி, வேலையின்மை, இப்படி எத்தனையோ பூசல்களுக்குள்ளே நம் கவிதையும் சிந்தனையும் நீளட்டும் கருத்துப் பகிர்க.