புது விதி செய்வோம்

புது விதி செய்வோம்
ஆண் பெண் ஆகிய இரு பாலினத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட நமது மனித சமுதாயம் இன்று அதே பாலியலை மையமாகக் கொண்டுப் பல மரபு மீறல்களையும் குற்றங்களையும் புரிந்து வருவது, ஊடகங்களுக்கு வேண்டுமானால் பெருந்தீனியாக இருக்கலாம் .ஆனால் நாளை நாம் விட்டுச் செல்ல இருக்கும் அடுத்த தலைமுறை, மரபுகளுக்கும் மரபற்ற கட்டமைப்பற்ற ஒரு சமுதாயத்திற்கு இடைப்பட்ட வெளியில் வாழப்போகிறதே என்ற கவலை நம் எல்லோருக்கும் எழாமல் இல்லை. அது குறித்து ஒரு கட்டுரை எழுத ஆசை. அது தொடர்பான பதிவுகள் உங்கள் விமர்சனத்திற்கும் கருத்துப் பகிர்வுக்கும் இத் தளத்தில் முன்வைக்கப்படுகிறது.
இலவசமாக நமக்கு ஒரு வலைத்தளம் கிடைத்து விட்டதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற போக்கில் இது எழுதப்படப் போவதில்லை. வரலாறு மற்றும் இலக்கியம் ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோளாகக் கொண்டு அக் கருத்தினை அனைவருக்கும் கொண்டு செல்லவும் அது குறித்தான ஒரு சமூகப் பார்வையை எல்லோரும் பெறுவதற்கான ஒரு பொது முயற்சியாக இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
இக் கட்டுரையை தங்களின் கருத்து மற்றும் விமர்சனங்களை உள்ளடக்கி அச்சேற்றவும் முயற்சி செய்யப்படும்
கீழ்க் கண்ட தலைப்புகளில் கருத்து பகிரவும். ஒவ்வொரு தலைப்பாக பதிவேற்றி விவாதம் செய்யலாம்
1. நாட்டு நடப்பு/பாலியல் ரீதியான மரபு மீறல்கள்
2. காதல்
3. காமம்
4. கள ஆய்வு
5. தன்பாலினக் கவர்ச்சி
6. ஆதிக் கால வரலாற்றில் காதலும் காமமும்
7. சங்க இலக்கியத்தில் காதலும் காமமும்
8. ஆணாதிக்கம்
9. பெண்ணடிமை
10. பெண் சுதந்திரம்
11. காமமும் கடவுளும் கலையும்
12. தீர்வு குறித்த மொழிவுகள்