பெற்றோர்

பித்ருக்களுக்கு ப்ரீதி ஏற்படுமாயின் நம்மை துன்பப்படுத்தக்கூடிய கிரஹ நிலையிலும் கூட நமக்கு எவ்வித துன்பமும் வாராது என்றார் மஹாஸ்வாமி.

இன்றைய நிலையில் வெளி நாடுகளில் பிள்ளைகள் வேலை பார்த்து வருகிறார்கள். பெற்றோரை அதிக பணம் செலவழித்து "முதியோர் இல்ல"ங்களில் நல்லபடியாக வாழவைப்பதாக எண்ணிக்கொண்டு கைவிடுவதோடு மட்டுமல்லாது, ஏனைய பிறவற்றிற்கு இரவல் வாங்குவதுபோல், பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களையில் இரவல் உறவுகள் மூலமாக செய்துகொண்டிருப்பதனை பலவாறு காணமுடிகிறது.

அவ்வண்ணம் ஏற்படாது, நூறு வருடங்கள் நமக்கென மஹாஸ்வாமியால் காப்பாற்றித் தரப்பட்ட சாஸ்திர சம்பிரதாயங்களை அதிகபட்சம் கடைபிடிக்க மனதில் உறுதிகொண்டு, அதன்படி நடந்து வாழ்வில் நாம் சீரடையவேண்டும் என ப்ரார்த்தித்துக் கொண்டு, பெரியவா சரணம் மாலையில் பதினாங்காவது புஷ்பம் தனை ஸ்ரீசரணரது பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

பெரியவா சரணம்.

எழுதியவர் : முரளிதரன் (19-Jan-14, 7:29 am)
பார்வை : 1227

சிறந்த கட்டுரைகள்

மேலே