உன் கண்களின் தீர்ப்பிற்கு

என் உள்ள பறவை
உன் நினைவுகளால் சிறை
பிடிக்க பட்டிருகிறது!
உன் புன்னகை விலங்குகளால்
கைது செய்கிறாய் இதயத்தை!
அன்பு எனும் உணவை ஊட்டி
உள்ள சிறையினின்று விடுதலை
தர மறுக்கின்றாய்!
எத்தனை நாள் காத்திருப்பது!
உன் நினைவு காவலர்கள்
தினம் வதைகின்றனர்!
உன் கண்களின் தீர்ப்பிற்கு
காத்திருக்கிறேன் !
உன் உள்ளம் கவர்ந்த கள்வன் நான்!
கருணை மனு போடுகின்றேன் !
உன் மனம் என்னும் சிறையில்
ஆயுள் தண்டனைக்காக!

எழுதியவர் : sai (19-Jan-14, 3:25 pm)
சேர்த்தது : சாய்
பார்வை : 115

மேலே