என் தலையணைக்காக
என் கண்களின்
ஈரம் சுமப்பாய் உன்னிடம்
என் சோகம் உரைத்ததில்லை.,
என் மகிழ்ச்சியில்
பங்குகொள்வாய்
அப்போதும் பகிர்ந்துகொண்டதில்லை.,
என் கோபத்தை
தாங்கிக்கொள்வாய் உன்
வலிபற்றி யோசித்ததில்லை.,
இருப்பினும்
உன்னிடமே உரிமையாய்
உலருகிறேன்...
நீயே என் தனிமையெனும்
கொடூரத்தை கொலைசெய்கிறாய்
என் மன இடுக்குகளில்
பதிந்துகிடக்கும் சோக ஒட்டடைகளை
சுத்தம் செய்கிறாய்!
அன்பால் நிறைக்கும் தாயாகவா ?
அக்கரை காட்டும் தந்தையாகவா ?
கொஞ்சி விளையாடும் சகோதரியாகவா ?
கண்டித்து காக்கும் சகோதரனாகவா ?
மனக்கருவில் சுமக்கும் காதலனாகவா ?
அப்படி என்ன செய்துவிட்டாய் ?
வெறும் ஆறுமணிநேர
உறக்கத்திற்க்கு உனை தேடுகிறேன்
சுயநலமாய்...
நீயோ உன் அறவணைப்பால்
உயிரட்ரும் உயிர் வாழ்கிறாய்...
எனை மறந்து சற்றே சவமாக
தூங்கிப்போகிறேன்...
எனை
தாங்கும் தலையணையென்ற
பெயரில் நீ இருப்பாய்
என்ற
நம்பிக்கையோடு!