கடந்து வந்த பாதை
தோல்விகள்
சந்தித்த கடந்த கால
வாழ்க்கை நீங்காத
வெருப்புகலாய்
காட்சி தரும்
தருணம்
இதுவன்றோ...!
வெகுதூரம்
நடந்த வந்த பாதை
உள்ளத்தில் மறவாத
நினைவுகளாய்
காட்சி தரும்
தருணம்
புதுமையன்றோ..!
தண்ணீரில்
கரைந்த உருவம்
உருவத்தை
காண நினைப்பது
புதுமையே..
சுற்றி திரிந்த
காலம் மறக்க முடியாத
நிழலாய் என் கண்
முன்னே
தோன்றுவதும்
இனிமையே..
சென்றுவிட்டது
காலமா...!
அல்லது
கடந்து விட்டது
நேரமா...!
உற்று நோக்கினால்
நிலையற்ற
வாழ்க்கை
வேசமிட்டு ஆடுவது
புரிந்து கொள்ளும்
உண்மையை
விளங்கிட நிற்காமல்
நடை பயணம்
மேற்க்கொள்கிறேன்
என்னுடன்
பயணிப்பது யார்..!