தென்னை மரம் பேசுகிறது

​எவரோ வளர்த்த பிள்ளைகள் நாங்கள்
முகம் இழந்த சோகத்தில் உள்ளோம் !
வெட்டுப் பட்டதால் பட்டுப் போனோம்
விட்ட மிச்சமும் அழிந்திடும் நிச்சயம் !

விதைத்தவர் ஒருவர் அறுத்தவர் வேறு
விற்று விட்டதால் விறகாய் மாறினோம் !
உடலே இல்லாத உயிராய் ஆகினோம்
உடமைகள் இழந்து உருமாறி போனோம் !

விளைநிலத்தில் வீரனாய் நின்றிருந்தோம்
வீடுகள் வருவதால் விரைந்து மறைகிறோம் !
மனிதன் மறைந்தால் படுக்கையாய் மாறுகிறோம்
மனிதம் மறைந்ததால் நாங்களும் வீழ்கிறோம் !

பிள்ளை இல்லார்க்கு பிள்ளையாய் இருந்தோம்
அழிக்காமல் இருந்தால் அகிலமும் வாழ்த்தும் !
மனித நெஞ்சங்களே மண்ணில் வாழவிடுங்கள்
நாங்கள் இருந்தால் உங்களுக்கு பலன்தானே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Jan-14, 6:21 pm)
பார்வை : 244

மேலே