பிடித்தமில்லா பொழுது
![](https://eluthu.com/images/loading.gif)
சூரியன் சுள்ளென சுட்ட பிறகே
கலைந்தோடும் என் காலையுறக்கம்.....
வீட்டு பாட சுமையின்றி
சுகமாய் நித்திரையிலிருக்கும் என்
இளங்கிளையின் பாட புத்தகங்கள்......
நவீன கால ரோமியோக்களில்லா
பேருந்து நிறுத்தங்கள்......
வெறுமையை மட்டுமே விழித்திரையில் காட்டும்
பேருந்தின் ஜன்னலோர இருக்கைகள்...
ஆரவாரமற்று அமைதியை அணிந்திருக்கும்
அரசு அலுவலகங்கள்.....
பிற்பகலின் முற்பொழுதிலும் கோலமிடா
என் எதிர் வீட்டு தேனாலை தமிழச்சி .....
என என் கனவுகளோடு அல்லாடும்
மற்ற தினங்களின் யதார்த்தங்கள்
துரத்தும் ஞாயிறுகளை மட்டும்
வெறுக்கிறேன் நான்.....