50 ஐம்பத்துஒன்பது வயது குழந்தையை வாழ்த்துங்கள்

சொந்தக் கவிதை - 50

(என் வாழ்க்கையின் நான்கு தூண்களுக்கும் இந்த ஐம்பதாவது கவிதை சமர்ப்பணம்)


மூத்தக்குடிமகன் எனும் வயதின் இலக்கு
வருவதிற்கு நான் எதுவும் பெரிதாய்
சாதித்ததில்லை இன்னும் வருடம் ஒன்று
காத்திருந்தால் அதுவே வந்துவிடும் தானாகவே
ஆனாலும் சிறியதாய் வாழ்க்கையில் செய்தமுயற்சி
மனதிற்கு பெரிதாய் நிம்மதி அளிக்கின்றது

ஒருவருக்கும் மனதாலும் கெடுதல் செய்ததில்லை
வாழ்க்கையில் பணத்தை பெரிதாய் நினைத்ததில்லை
முடிந்தவரை பிறர்க்கு உதவிட தயங்கியதில்லை
குழந்தைகள் எடுக்கும் முடிவினில் குறிக்கிட்டதில்லை
அவர்களுக்கு மனதைரியம் கொடுக்கத் தவறியதில்லை
அடுத்தடுத்து தோல்விகள் வந்தும் நிலைதடுமாறியதில்லை

பிறர் செய்யும் வேலைகளை விமர்சித்ததில்லை
இல்லாதவைகளை எண்ணி தினமும் புலம்பியதில்லை தவறுசெய்தபோது மன்னிப்புக்கேட்டிட என்றும் தயங்கியதில்லை
தவறு செய்தவர்களை மன்னிக்க மறந்ததில்லை
என்னிடம் உள்ள குறைகளைக் கேட்க தவறியதில்லை
மனிதனாய் வாழ்ந்திட கடுமையாய் முயற்சி செய்தேன்
ஒருசிலவெற்றிகள் வந்தும் இறைவனை மறந்ததில்லை
என்னில் இருந்த கோபத்தை குறைத்துவிட்டேன்
என்னையே மாற்றியதால் மகிழ்ச்சி கொண்டேன்
அறுபது தொடங்கும் இந்நாளில் என்னிலும்
பெரியவர்களை பாதம்வணங்கி வாழ்த்திட வேண்டுகிறேன்
சிறிவர்களை வாழ்த்தி மகிழ்ச்சியும்வளமும்பெற பிரார்த்திக்கின்றேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Jan-14, 6:43 am)
பார்வை : 73

மேலே