இதயம் திறந்து பார்ப்போமா
இமை திறந்து பார்த்தால்
இருப்பவை வண்ணங்கள் - நம்
இதயம் திறந்து பார்த்தால்
இனிக்கும் அவை கவிதைகள்...!!
அசிங்கம் என்று ஒன்றுமில்லை - அதனால்
அதற்குள் அடங்குது அகம் எனும் சொல்
அழகாய் வைப்போம் மனமதனை - உயிர்களை
அணைப்போம் மனத்தால் அன்புடனே
இதோ
எய்ட்சால் பாதித்த இளம் கவிதை
எடுத்தே கொஞ்சுவோம் இதமுடனே....!!