யாரோ போட்ட வாந்தியில்

தேநீர் இடைவேளையின்
பரபரப்பு நேரமொன்றில்
தேநீர் அருந்த வந்து
அதற்க்கு முன்பு
தாகத்திற்கு தண்ணீர் குடிக்க
எத்தனித்த பொழுது குழந்தையின்
எச்சில் பட்ட தண்ணீர் என்று
முகம் சுளித்து டம்பாளரை
இரண்டு முறை கழுவி விட்டு
குடித்த அந்த மனித நாக்கு

கதிரவனின் மறைவிற்கு பின்
வெகு நேரம் கழித்து
கை பிடியில் சிக்கிய
மது கோப்பையில்
கடைசி ரச சொட்டில்
எங்கோ கழிவுகளில்
அமர்ந்த ஈ ஓன்று
விழுந்து இருந்ததை கவனித்தும்
எதையும் சுளிக்காமல்
ருசித்தது
அந்த சொரணை கெட்ட நாக்கு

யாரோ போட்ட வாந்தியில் புரண்ட
ஜடத்தின் வடிவம் வான் வழியே
வாழ்க்கை என்று மூளையற்று
முனகி கொண்டு இருந்தது
முக்கிய வீதியொன்றின் முடிவில்

விடியலில் பால் வாங்க வந்த குழந்தை
தன் தந்தையிடம் கேட்டது
" அந்த அங்கிளுக்கு உடம்பு சரி இல்லையாப்பா என்று"

எழுதியவர் : த.நந்தகோபால் (20-Jan-14, 6:05 pm)
பார்வை : 328

மேலே