மகளிர் பருவங்கள்
மகளிர் பருவம் எத்தனை என்று சொல்லடி என் செல்லமே !
மகளிர் பருவம் ஏழு! நீ இதுகூடவா தெரியாத ஆளு?
எண்களைச் சொன்னால் போதாது; பெயர்களை சொல்வது நல்லது !
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் என ஏழுவகை பருவங்கள்;
பேதை என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
பள்ளிக்குச் செல்ல மெல்லத்தொடங்கும்
எழுத்துக் கூட்டிப் சொல்லிப்படிக்கும்,
எடுத்ததுக் கெல்லாம் அடம்பிடிக்கும்
கடவாய் பற்கள் விழுந்து முளைக்கும்
கேள்விக் கணைகளால் தினறிடிக்கும்
ஏழாண்டுப் பருவமே பேதை பருவம் !
பெதும்பை என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
பள்ளிக்குச் சென்றால் டீச்சர் பாடத் தொல்லை
வீட்டுக்கு வந்தா ஆத்தா அன்புத் தொல்லை
ரோட்டுல நடந்தா நண்பர் நட்புத் தொல்லை
மூண்றுக்கும் நடுவே மாட்டிக்கிட்டு முழிக்கும்
எட்டு முதல் பதினொரு வயது பருவம் பெதும்பை பருவம் !
மங்கை என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
பூ பூப்பதுப்போல் பெண் பூப்பெய்துவாள்
தாய் மாமன் தந்த தாவணி கட்டுவாள்
மங்கை பட்டம் அளிப்பதற்கு சுற்று வட்டம் சூழ்ந்திருக்க
வெட்கத்திலே தலை குனிவாள்
வயது பதினைந்தில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதுவாள் !
மடந்தை என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
குத்தவச்ச நாள்முதலாய் வீட்டை
வாலிப பசங்க வட்டம் அடிப்பாங்க
காதல் கடிதம் தருவதற்கு போட்டியிடுவாங்க
மடந்தை பருவத்தில் மனசு பலவாறு அலையும்
வயசு பதினெட்டை தாண்டி பயணம் செல்லும் !
அரிவை என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
எப்படியோ அடிச்சி புடிச்சி மாமியார் வீடுக்குப் போயாச்சி
மாமன் பட்ட அவசரத்தில் ரெண்டு புள்ளைக்கு தாய் ஆயாச்சி
இன்னும் ரெண்டு பெத்துக்கலாம் வயசு இருப்பத்தஞ்சை தாண்டியாச்சி
அளவுக்கு அதிகமா பெத்துக்கிட்டா அரிவைப்பருவம் அழகு குறைஞ்சிடும் !
தெரிவை என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
பெத்த புள்ளைகளுக்கு இப்பவே சொத்து சேக்க கத்துக்கனும்
அவர்களின் எதிர்கால வாழ்வைதான் எப்போதும் சிந்திக்கனும்
இது கட்டாயம் 25 முதல் 40 வயதுவரை உள்ள
தெரிவை பெண்கள் நிச்சயம் தெரிஞ்சக்கனும் !
பேரிளம் பெண் என்றால் என்ன சொல்லடி என் செல்லமே !
பெத்ததுக்கு கல்யாணம் முடிச்சி
பேரன் பேத்திகள் எடுத்து
ஆயா பாட்டி கிழவி என
பேரக் குழந்தைகள் கொஞ்சுவதை
கேட்டுக் கொண்டே காலத்தை கழிப்பதும்
காசியாத்திரை செல்வதும் – 40 வயதுக்கு
மேலுள்ள பேரிளம் பெண்களின் பருவமாகும் !
பெண்ணின் பருவத்தை எடுத்துரைத்த கவிப்பெருமகனே !
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் நீ வாழ்க பல்லாண்டு..!