ஒன்றுபடுஓங்கியடிவென்றுஎடு பொங்கல் கவிதை போட்டி
விசும்பும் வியக்கும் எம்மண்ணழகு கண்டு
பாடலாட லென்றே இரவுபக லுண்டு
விதைகள் விதைத்தே, எம்வேளாண் - வேறில்லை
பிரிவினைஎன் றஒன்றின் வேரேயில்லை.
தாழ்வின் சொற்கூட்டு மறியோ முயரஃறிணை
என்றோம் அறியாமையே அடிப்படைப் பிரிவாதலால்
பிரிகிலர் இனம்விட்டு, தெரிதொழில் - எரிதொழில்
ஆயினும் செய்வோம் உயர்தாழ்வில்லை.
உயிர்க் கொன்று ஊன்தின்னும் ஓர்கூட்டம்
உண்பொருள் ஓட்டி உள்வந்த அக்கூட்டம்
கற்பித்தோம் உழைத்துண்ண, விதைத்துண்ண - மொழியொடு
கற்றான் தனிமொழி நெய்யவும்.
வரிகொண்டான் அடிகோலாய் எந்தாய்வரிக் கொண்டான்
இதோ புதிதாய் தொழிற்பிரிவு பகர்ந்தான்
பகட்டாய வன்வாழ, பதிந்தான் - எம்முள்
அறியாமை அடிப்படைப் பிரிவு.
சமயஞ்சாதி மதமென்று போர்க்கொண்டு வென்றகாணி
ஏர்க்கொண்டு உழுதகாணி எல்லாம் கொண்டான்
அகப்புண் ணொடுதாய்மண், நீர்ப்பருக - வளைந்த
எம்நாணில் செருகினன் குறுவாளை.
அவனாட்சி வல்லோன் கணிப்பு உண்மையாக
கீழோன் ஆனோம் அந்தமில்லா ஆதிமறவர்
சந்தமின்றி சரிந்தது, எம்மினம் - அன்று
பிரிந்தோமின் றுமியலோம் ஒன்றுகூட.
-----------Praveen raja 20-Jan-2014