எம் தமிழே நீ வாழி பொங்கல் கவிதை போட்டி
மண் தோன்றா முன் தோன்றி
மூதுரைத்த மூத்த இனம்
ஆதி இனம் ஆண்ட இனம்
யாதுமாகி நின்ற இனம்
மாண்புகள் மறந்ததால் மதியற்றுப் போனதிங்கு !
தரணி எங்கும் பாய்ந்தவன்
தரம் தாழ்ந்து கிடக்கிறான் !
வரலாறு மறந்திங்கு வாழ்விழந்து கிடக்கிறான்
அடிமையானோம் அகதியானோம்
அன்னியமானோம் நமக்கு நாமே !
வேரறுந்து கிடக்குது என் தொப்புள் கொடி உறவு
அரசியல் விளையாடிக் களிக்குது
என் உடன் பிறந்த பிறப்பு
உதிர்ந்து கிடக்குது உலகெலாம் எம் உதிரம் !
பழையன மறப்போம் புதியன தொடுப்போம்
கருப்பு அத்யாயங்களின் கறைகளைத் துடைப்போம்
தடைகள் தாண்டி தனித்துவம் பெறுவோம்
ஈராறு கோடி இதயங்கள் துடிக்கட்டும் –தமிழ்
எனும் மந்திரச் சொல் அதில் ஒலிக்கட்டும்
எம் தமிழே நீ வாழி !!!
-----------thilakavathy 20-Jan-2014