மணி அடிக்குது
மணி அடிக்குது
மணி அடிக்குது
பள்ளிக்கூட
மணியடிக்குது
பாடத்தை நிறுத்து
வாத்தியாரே.......
பாய்ந்து நானும்
ஓடப் போறேன்
பந்தைப் பிடிக்க
துள்ளிப் போறேன்
பாடத்தை நிறுத்து
வாத்தியாரே........
கற்ற கல்வி
மனசில் இருக்கு
பெற்ற புள்ளி
நினைவில் இருக்கு
பாடத்தை நிறுத்து
வாத்தியாரே...........!!