கடல்
தகுந்தபடி பறவையாய் அவிழ்ந்து விழுந்து கொண்டிருக்கிறது காற்று.
சின்னதும், பெரியதுமான
பறவைத் துண்டுகள் தரையில் விழுந்தவையெல்லாம்
மீண்டெழுந்து பறக்கின்றன
வானை நோக்கி.
பறவைக்குப் பறக்கத் தெரியும்.
நீச்சல் எப்படித் தெரியும்?
குளத்தில், கிணற்றில் விழுந்தவையெல்லாம்
நீச்சல் தெரியாமல் மும்முறை மூழ்கியெழுந்து செத்துப் போகின்றன.
_
தன் உயிர்ச்சிறகசைத்து
பிரம்மாண்டமாய் கடல்மேல் விழுகிறது மற்றொரு பறவைக் காற்று.
கடல் ஓர் அதிசயம். அதற்கு எல்லாம் தெரியும். சட்டென்று
அலைநீச்சல் அடித்து
கரைக்குத் தள்ளிவிடுகிறது
காற்றுப் பறவையை!!!