அன்பான மூங்கிலுக்கு

போயிருக்கலாம் நீ!
ஒரு கோலாக ஆகிவிட்டாய்.
இசையைத் திறந்த உன் கீழ்
இசைக்கிற குருவிகள் சேர்ந்துவிட்டன.

குருவிகளின் குரலிசையில் நீ உந்தன் குழலிசையை மறந்தாய்.
சிறகின் விரிப்புகளுக்காக
ஒழுகுகிற திண்ணையில்
காத்திருந்தேன் நான்.

கனவுகள் இமைகளை அழுத்த
கவனம் தவறியதொரு கணத்தில் கழியென்றெண்ணி உனை எருமைகளை விரட்டுவதற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான் ஒருவன்...

எங்கோ அவன் அடிக்கிற அடிகள்
எனை இம்சிக்கின்றன இங்கே.
பொத்தல் குடிசையின் கொம்பாக உனை செருகி வைத்தது என் குற்றம் தான்.
_
சில வேளைகளில்
புல்லாங்குழலாகாமல்
போகிற மூங்கில்கள் தருகிற ஓசைகள் இனிமையாய் இருப்பதில்லை.

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 8:33 am)
பார்வை : 42

மேலே