இசை

நாட்டியம் போல் என் விரல்களாட மெல்ல... மெல்ல
இசைத்தேன்.
_
அசைவனவெல்லாம்
அசையாதாயின. ஆர்ப்பரித்தது கூட்டம். கையெழுத்திட்டேன்.
இசையரசன் பட்டம் கொண்டேன்.

கருவியைப் பத்திரமாய்
வைத்துக் கொண்டேன்.
கால்கள் மிதக்க மிதக்க
நடந்துகொண்டிருந்தேன்.
.
எதிர்வந்த காற்று முகத்திலறைந்து என்னைக் கடந்தபோது கேட்டது
தூர இருக்கும் சவுக்கு மரத்தோப்பில் காற்றடித்த சிட்டியொலி. அதிர்ச்சியில் தரைதொட்டன
என் கால்கள்.
.
முட்டாள் நான். கருவியைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
ஒரே ஒருவர்தான் காற்றைப்
பத்திரமாக வைத்திருக்கிறார்.

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 8:37 am)
Tanglish : isai
பார்வை : 70

மேலே