அருவி

ஒருவர் சொன்னார்:தண்ணீர்
தடுக்கி விழுந்துவிட்டது!
இல்லையில்லை...
தண்ணீர தற்கொலை செய்து கொண்டது!
நீங்களொன்று...
நிலம் தன் முகம்பார்க்க
எழுந்து நிற்கிற நீர்க் கண்ணாடி இது!

மலைக்காளியின் நீள் வெள்ளை நாக்கு! காற்று இறங்கிவர
கற்கள் போட்ட தண்ணீர்ப் பாலம்! நிறுத்துங்கள்...
வானம், பூமிக்கு,நடத்துகிற
நீராபிஷேகம்!
ஆளுக்கொன்றாய்
அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதாவது சொல்லேன்
என்றானொருவர் என்னைப் பார்த்து அருவி என்றேன்.
இருப்பதை இயல்பாய்ப் பார்ப்பதில் பிழையொன்றுமில்லையே?

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 8:39 am)
Tanglish : aruvi
பார்வை : 53

மேலே