இந்து தர்ம சாத்திரம் 1
நம்மை உயர்த்துவது நமது செயலன்று; அச்செயலைச் செய்வதிலுள்ள ஆர்வமே நம்மை உயர்வடையச் செய்கின்றது. அதே போன்று மனிதனைத் துன்பத்துக்கு ஆளாக்குவது பொருள் அன்று; பொருளிலும், அதிகாரத்திலுமுள்ள ஆசையும் பற்றுமேயாகும். பொருளையோ, அதிகாரத்தையோ சரியாகவும் அளவாகவும் உபயோகிப்பவர்கள் மட்டுமே மனித இனத்தின் பரோபகாரிகளாகக் கருதப்படுவார்கள்.