முயற்சி
மனோ
முயற்சி செய்...!
மூடுபனியாக தோல்வி உன்னை சூழ்ந்த போதிலும்..!!
மேடு பள்ளங்கள் வாழ்க்கை பாதை ஆனா போதிலும்..!!
ஏனடா இந்த வாழ்க்கை என்ற எண்ணம் எழுந்த போதிலும்..!!
இருளின் இறுதியில் இருந்த பொழுதிலும் ..!!
மனம் தளர்ந்து மடிந்து மண்ணாகிவிடாதே..!
முட்டி முளைக்கும் விதைககளுக்குத் தெரியும் முயற்சி என்னவென்று..!!
முயன்று தோற்றுப்பார் தோல்வி கூட வெற்றியின் சுவை கொடுக்கும்..!
முயல மறுப்பவன் வாழ மறுக்கிறான்..! முயன்று பார்..!!