கல்லணைக்கோர் பயணம்10
கல்லணைக்கோர் பயணம்...10
(இடையாற்றுமங்கலதிலிருந்து )
மெல்ல நினைவிற்குள்
தொலைய ஆரம்பித்தேன்
பயதிற்க்கான காரணதிற்க்குள்..
ஆம்..! காரணம்
சொல்லவில்லை எனில்
தூக்கம் வராதே நிம்மதியாய் ..
காரணத்தை சொல்லிச்சொல்லியே
காரியத்தை கச்சிதமாய்
மறப்பது கைவந்த
கலையாயிற்று அன்றுமுதல்..
இடையாற்றுமங்கலம்
பெயருக்கு ஏற்றவாறு
கொள்ளிடம் ஆற்றையும்
தெற்க்கைய்யன் வாய்க்காலையும்
அரணாக கொண்ட அழகூர்
தெற்க்கைய்யன் வாய்க்கால்
அய்யமிக்கால் ஆகிப்போனது
காலப்போக்கில் கச்சிதமாய்..
வீட்டிற்க்கு வந்த
உறவோடு ஊருக்கு
வரும் ஒற்றை
பேருந்தைக் காண
அய்யமிக்காலை கடந்தோம்
ஆசையாசையாய் ஆர்வத்துடன்
கழுத்தளவு நீரைக்கடந்து
பால்வாடி பள்ளியில்
படித்த தருணமது
பேருந்தை பார்த்துவிட்டு
வீடு திரும்பி
விளையாடி கொண்டிருந்தோம்
ஆசைதீற ஆவலாய்..
பாப்பா எங்கே..?
அம்மாவின் அதட்டல் குரல்
பயத்துடன் திரும்பினோம்
பார்க்கவில்லையே..! என்றோம்
உங்களுடன் வந்தாளே..
எங்களுக்கே தெரியாது
எங்கள்பின் வந்தது
அதிர்ந்து போனோம்
அதிர்ச்சியில் உறைந்தவாறே..
சிறிது நேரத்தில்
யாரோவந்து ஏதோசொல்ல
தலையில் அடித்தவாறே
அழுதுகொண்டே ஓடினார்கள்
அம்மாவுடன் அனைவரும்..
நாங்களும் அழுதோம்
எல்லோரையும் பார்த்துப்பார்த்து..
(பயணிப்போம்..10)
இடம் : தெற்கு அய்யன் வாய்க்கால் - இடையாற்றுமங்கலம்
புகைப்படம் : Suresh Nagasen