தந்தை

வெப்பம் தாங்காமல்
வந்த வியர்வைத் துளியா?
துக்கம் தாளாமல்
வந்த விழியின் துளியா?

பார்த்து நான் ஏங்கி
எண்ணியதுண்டு!

என்று வரும் நான்
உழைக்கும் காலம்?
என் தந்தையின்
ஈரம் துடைக்கும் காலம்?

கந்தையானாலும் கசக்கி கட்டி
சந்தைக்கு செல்லும் என் தந்தை!
நொந்து போனாலும் சிந்தையை மாற்றி,
சொந்த காலிலே நின்று காட்டு! என்னும்
விந்தையானதொரு பந்தம் தந்தை!
===================
===================
தாயை போற்றி பல கவிதைகள் உண்டு,
அவள் அன்பை போற்ற பல கவிஞர்கள் உண்டு,
தந்தையால் தானே பெண் தாயாகிறாள்!

விந்தை தான் எனக்கு!

கண்கள் இரண்டிலே
ஒன்றிற்கு ஒளி கொடுத்து,
மற்ற ஒன்றினை
ஒழிப்பதை கண்டு!

தாயின் அன்பினை பறைசாற்றும் கவிகளே!
தந்தையின் பண்பிற்கும் சற்று இடங் கொடுங்களேன்!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (22-Jan-14, 2:00 pm)
Tanglish : thanthai
பார்வை : 127

மேலே