அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள் (பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு)
1. ஒரு நாளைக்கு 41 மில்லியன் டாலர் அதாவது 254 கோடி சம்பாதித்த சூதாட்ட ராஜா என அழைக்கபடும் ஷெல்டன் அடெல்ஸன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் / மகாவ் மற்றூம் சிங்கப்பூரில் வைத்திருக்கிறார் வை ராஜா வை சூதாட்ட கடைகளை.
2. நமக்கு நன்கு பரிச்சயம் ஆன ஃபேஸ்புக் நிறுவனர் - 1360 கோடி டாலர்களை இந்த வருடம் பெற்றவர்.... இவரின் தின வருமானம் 230 கோடிகள் ஆகும் - தீயாய் வேலை செஞ்சு மார்க்கை காப்பத்துனும் குமார்களே குமாரிகளே
3. அமேஸான் நிறுவனர் ஜெஃப் பிஜாஸ் இந்த அருடம் மட்டும் 1310 கோடி டாலர்களை நெட்டாக பெற்றூள்ளார்.
4. வாரன் பஃப்ஃப்ட் தினமும் 33 மில்லியன் அதாவது 205 கோடிகளை சம்பாதித்தவர் ஆவார்.
5. வால்மார்ட்டின் ராணி (அதிபர்) கிரிஸ்டி வால்டன் இந்த வருடம் மட்டும் 40% உயர்வை கொண்டு இவரின் வால்மார்ட் பங்கு மொத்த மதிப்பு 3750கோடி டாலராய் உயர்ந்தது.
6.அடுத்து வருபவரும் வால்மார்ட்டின் ராஜா என அழைக்கபடும் ரப்ஸ்ன் வால்ட்டன் இவரின் பங்கு மதிப்பு 3500 கோடி டாலர்கள்
7. ஆலிஸ் வால்ட்டன் என்ற இன்னொரு வால்மார்ட்டின் பங்கு ராணி தன் பங்கு மதிப்பு 3500 கோடி டாலராய் உயர சம்பாதித்தவர்.
8. இன்னொரு வால்மார்ட் பங்குதாரரான ஜிம் வால்ட்டன் இந்த வருடம் மட்டும் 1000 கோடி டாலரை சம்பாதித்து தன் பங்கின் மதிப்பு 3550 கோடி டாலராய் உயரவைத்தவர்கள்
9. கூகுள் கோ ஃபவுன்டர் லேரி பேஜ் இந்த வருடம் மட்டும் 940 கோடி டாலர்களை சம்பாதித்து 3050 கோடி டாலராய் தன் பங்கு மதிப்பை உயர்த்தினார்.
10. மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் தன் வருமானமாய் தினமும் 25.5 மில்லியன் அதாவது 158 கோடியை சம்பாதித்தவர்.
அனைவரும் உலகம் முழுதும் வணிகம் செய்தாலும் - அமெரிக்காவில் தான் இவர்களின் மொத்த பணமும் போய் சேர்கிறது.