வெள்ளை ரோஜா
உன் விழிகளில் ஒரு நாள் ...
நீ விழித்ததும் நான் ...
மயில் இறகை கொண்டு இந்த
வெள்ளை மயிலை எழுப்பினேன் ..
காலை தேநீர் என் கையால்...
சிரித்தபடி நீ ..அமுர்தம் என்றாய் ...
உன்னுடன் சொர்க்கத்தில் இருக்கும் எமக்கு இது சத்தியமே என்றேன் ...
நிலவும் பகலில் நீராடும் படி உன் ஆடை தந்தேன் ...
வந்தவளுக்கு என் பார்வைகளில் பாச பசியை போக்கினேன் ....
சில நேரம் மெல்லிசை கொண்டு சில செல்லமாய்
மெல்ல இதழில் யாசித்தேன் .....
மதியம் என்னால் செய்த அறுசுவையும் ..
என் கைகளால் உமக்கு ......
என் முதல் பிள்ளை அடி நீ ......
சுட்டரிக்கும் ஆதவனின் அருகில் அமர்ந்து
ஜில் என்று AC யில் என் மடியில் நீ ...
சிறிது நேரம் .....
ஆதவன் மறையின்தான்.. சந்திரன் சிரித்தான் ..
எங்கே செல்வோம் என்று தெரியாமல் பயணம் ...
பணிகளில் நினைத்த படி திரும்பினோம் ...
இது வரையில் புடிக்காத மல்லிகையின் வாசம்
அன்று உமக்கு ஏனோ புடிதிருன்தது ....
நடுக்கத்தில் இருவரும் ... சுவாச காற்று சத்தத்தில் .
வாழ்வுக்கான வரம் பெற்றோம் .....
அன்று புரிந்தது வெள்ளை ரோஜா ...
உமக்கும் எமக்கும் தெறித்த ரகசியம் என்று ......