விழியே விழியே

என்னவனே ,

என் வாழ்வு உன்னுடன்தான்
என்று நினைக்கவில்லை நான் !
ஆனால் நீயின்றி எனக்கு வாழ்வேது !

பொருளறிய முடியாக்
கவிதை இவள் என
நினையாதே !
பொறுத்திருந்து பார்
அது நீயாகத்தான்
இருப்பாய் எப்போதும் !

என் நெஞ்சத்தில்
தேக்கி வைத்த காதலை
கொள்ளையிட்டவன் நீ !
எனைக் காதலித்து !..

எதற்கென்று தெரியாமலே
காதலிக்கிறேன் உன்னை ..
உயிருக்குயிராய் !

இனியவனே!என்
கண்களைக் கண்டவுடன்
காதலில் விழுந்தேன்
என்றாய் நீ !

என்னைப் பார்த்து
ரசிக்கும் உனக்கு
கண்களறியா என்
காதலை தந்துவிட்டேன் !
உன் விழிகளில் உயிராய்
நான் கலந்து !

எழுதியவர் : கார்த்திகா AK (22-Jan-14, 6:12 pm)
Tanglish : vizhiye vizhiye
பார்வை : 113

மேலே