இவர்களெல்லாம் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டால்

இவர்களெல்லாம் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டால் காளை மாட்டை எப்படி அடக்குவார்கள்? ஒரு கற்பனை.

ராமராஜன் : பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.
மாடு : இதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன் போய்யா.

ராஜேந்தர் : ஏய் மாடு! எனக்குக் கோவம் வந்தா தாங்காது இந்த நாடு. எம்முன்னாடி நீ ஒரு சாதாரண ஆடு. இதுதான் நீ போகவேண்டிய ரோடு. இப்போ போடப்போறேன் உனக்கு ஒரு கோடு. அதோ பார் காடு. அதை நோக்கி நீ ஓடு.

மாடு : அடச்சீ மூடு!

விஜய் : என்னாங்ணா? ஒழுங்கா இருக்க முடியாதாண்ணா உங்களால? இந்த “ஜில்லா”வுல நான் வெச்சதுதான் சட்டம்ணா.

மாடு : அடச்சீ! உன் “ஜில்லா”தான் மொக்கையாயிடுச்சே! எனக்குத் தெரியாதா? ஒழுங்கா ஓடிடு. இல்லைன்னா நீ நடிச்ச “சுறா” படத்த உனக்கே போட்டுக் காட்டிடுவேன்.

பூர்ணம் விஸ்வநாதன் : ஏஏஏஏஏ... நீநீநீநீ... நான் சொல்றதக் கேக்கமாட்டியா? பகவானே! நோக்கு எப்பிடிப் புரியவக்கிறதுன்னு நேக்குத் தோணல்லியே?

மாடு : அடப் போங்க சாமி! 500 ரூபா வாங்கிட்டு 5000 ரூபாய்க்கு நடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்.

பிரகாஷ் ராஜ் : டே டே டே டே! செல்லம் செல்லம் செல்லம்! சொன்னாக் கேளுடா! ஏண்டா இப்பிடி அடம் புடிக்கற?

மாடு : போய்டு போய்டு போய்டு! இல்லேன்னா முட்டி முட்டி முட்டியே சாவடிச்சுருவேன்.

கடைசியாக நமது கேப்டன் : நம்ம தமில் நாட்ல பொறந்துட்டு தமிலன் சொல்றதக் கேக்காமப் போனா எப்படி? நான் உங்களுக்கெல்லாம் வால்த்து சொல்லலைன்னு கோவமா? உங்கலுக்கு இப்போ வால்த்து சொல்றேன். “I PISS YOU GAPPY MAADU BONGAL”

மாடுகள் கூட்டமாக : நீ பேசின தமிழ்தான் மொக்கைன்னு நெனச்சோம் (தமில், வால்த்து) ஆனா, கடைசியா இங்கிலீஷ் பேசினியே, அதைத்தான் எங்களால தாங்கிக்க முடியல. இனியும் நாங்க உயிரோட இருந்தா அது எங்க குலத்துக்கே கேவலம்யா என்று சொன்னவாறே ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன.

எழுதியவர் : முரளிதரன் (22-Jan-14, 9:35 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 187

மேலே