பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்

பிளாஸ்டிக் பையில் டீ வாங்காதே
பித்தப் பையில் கான்சர் வாங்காதே


வாழை இலையில் சாப்பாடு ....ஆயுசு நூறு
பிளாஸ்டிக் இலையில் சாப்பாடு .. ஆயுசு கேடு

பூமியைக் கெடுக்கும் பூதம் யாரு...?
பிளாஸ்டிக் என்றே அதற்குப் பேரு


வீதி எங்கும் பறக்குது பார் பிளாஸ்டிக் குப்பை
விழி பிதுங்கி அழுகுது பார் பூமிப் பந்து


பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரு
பூமித்தாய்க்கோ கண்ணீரு


ஒத்தை ரூபா பொருளுக்கும்... பிளாஸ்டிக் கவரா...?
ஒத்தை பைசா மதிப்பில்லாமல் பூமி.. அழியுது ஜோரா...


கொஞ்சம் கொஞ்சமாய் ...சேரும் பிளாஸ்டிக்
கெஞ்ச கெஞ்ச ...பூமியைக் கெடுக்குமே..

வேண்டும் வேண்டும் பூமி வேண்டும்
நாங்கள் வாழ பூமி வேண்டும்


காடு மேடு நாடெல்லாம் .. கிடக்குது பார் பாலிபேக்
கண்ணாமுழி திருகி சாக...... கிடக்குது பார் உலகம்


ரோசாப்பூவு.... பூமித்தாய்
நாசமாக்குது.... பிளாஸ்டிக்பேய்

எழுதியவர் : murugaanandan (23-Jan-14, 12:01 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 19974

மேலே