தமிழனின் சூளுரை - மணியன்

எங்கள்
உரவின் ஓலங்கள்
உள்ளிருக்கும் நினைவுகளில்
ஊசியாய் குத்துகின்றன . . . .

எங்கள்
குழந்தையின் அழுகுரல்
குருதியான நெஞ்சை
குத்திக் கிழிக்கின்றன. . .

எங்களை
முகவுரை அறியா
மூடர்கள் கூட்டம்
முடிவுரை அமைக்கின்றன. . .

எங்கள்
கனவுக் கோலங்கள்
கண்ணீரில் மூழ்கி
கரைந்து போகின்றன. . .

எங்கள்
அகம் புறம் - தன்
அகத்தே கொண்ட - தென்
அகமும் விழிக்கின்றது. . .

எங்கள்
வாடிய முகத்திடம்
வந்தனம் கூறி
வலம் வரும் கவிதைகள் மட்டும்
வழி காண்போம் என
வாடிச் செல்லாமல்
வகையாய் சுற்றுகின்றன. . .

எங்கள்
புலவர்கள் அன்று
புனைந்தவை எல்லாம்
பொய் இல்லை என்றுலகில்
புரியப் போகின்றனர். . . .

எங்கள்
தமிழ்தான் எம்மை
தனியே விடாமல்
தாவிப் பிடிக்கின்றது. . . .

எங்கள்
மனம் என்னும் கோவிலில்
மணமாய் மொக்குகள்
மலரத்தான் போகின்றன. . .

எங்களை
தீயவர் கொல்லும்
மாயைகள் விலகி
மறையத்தான் போகின்றனர் . . .

எழுதியவர் : மல்லி மணியன் (22-Jan-14, 11:22 pm)
பார்வை : 255

மேலே