-கருத்திலே பூத்ததுதிருவிவேக்பாரதிக்குப் பாராட்டு

இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றது என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப் படுகிறது.

இனி கவிதை:
====
சீனத்துத் தென்றலே! வாழ்க!

சீனத்துத் தென்றலே! செந்தமிழைப் பாடிவரும்
வானத் திளங்குயிலே! வாழும் நமதுறவின்
கானமே! கண்ணே! கலைமகளே! தன்னாட்டின்
வானத் தொலியாக வந்தவளே! வாழ்க,நீ!
====
172210-என்ற எண்ணின் கீழ் ஒரு கவிதை எழுதி இந்த உந்துதலை எனக்குள் ஏற்ப்படுத்திய திரு.விவேக்பாரதி அவர்களுக்கு எனது பாராட்டுகளை மட்டுமல்ல நன்றியினையும் சமர்ப்பிக்கின்றேன்.

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (23-Jan-14, 7:26 am)
பார்வை : 72

மேலே