குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா

காப்பிக்குள் கண்டேன் நானும்
காலை விடியலின் நிழல்....!
காக்கிக்குள் பிம்பம் தெரியுமோ என
கருத்தினில் குழப்பம் வேண்டாம்...!
காலியான கோப்பையதில் என்
கற்பனையே நிரப்பியது....
காசில்லை ஒரு கப் தேநீர் வாங்க - எனினும்
கனவினிலே கடவுளோடு அமுதப் பார்ட்டி....!!
( காலிக் கோப்பையென்று மேலே
கவிதை வரி சொல் நயத்துக்கே - உண்மையில்
காற்றே அதில் நிரம்பியிருந்தது - எனவே
காலி என்று ஒன்றுமில்லை - நிறைவுதான் எங்கும்
குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா )