-கருத்திலே பூத்ததுதிருபார்த்தீபனுக்குப் பாராட்டு

173161 என்ற எண்ணில் திரு பார்த்தீபன் அவர்கள் எழுதயுள்ள அழகிய கவிதை ஒன்றைப் படித்த பொது என் கைகள் இப்படி எழுதிப் பார்த்தது. இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றது என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப் படுகிறது.
திரு.பார்த்தீபன் அவர்களே பாராட்டுக்குரியவர் என்றால் அது முற்றிலும் உண்மைதான்.
இனி கவிதை:

உயிரெனக்கும் காதலுக்கும் நீ தர வேண்டும்!

கொல்லவந்த இரவிதுவோ
செல்ல மறுக்கும்!
கூடவந்த துயர்,கதிரைக்
கொண்டு தகிக்கும்!
மண்டுகின்ற மேகமெனைக்
கண்டு சிரிக்கும்!
அண்டுகின்ற கனவுகளோ
அதிகம் வதைக்கும்!
தண்டிருந்தும் நீரிழந்த
தாமரை யானேன்!
கொண்டிருந்தும் மூச்சுதவாப்
பண்டமென் றானேன்!
பண்ட மாற்றில் செல்லாத
பாத்திரம் ஆனேன்!
உண்டு இல்லை என்று சொல்ல
நீ வர வேண்டும்!
உயிரெனக்கும் காதலுக்கும்
நீ தர வேண்டும்!
===== =====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (23-Jan-14, 6:48 am)
பார்வை : 94

மேலே