மடிந்து மண்ணோடு மக்காகும் மனித நேயம்

எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!!
===============================================
இன்று முகநூலில் நான் கண்ட புகைப்படம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் உடலில் தீயிட்டு கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சி" என்ற செய்தியுடன் அந்த படம் பதியப்பட்டிருந்தது.

அந்த படத்தில் அத்தனை அதிர்ச்சியும், ஆம்! தீயில் எரிந்து துடிக்கும் ஒருவனை சுற்றி நின்று காணொளி படம் எடுக்கும் புத்தியற்ற ஊடகவியலாள முட்டாள்களின் கூட்டம் அது. "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி", "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்"!! இவர்கள் பிறந்த தமிழ் நாட்டில் தானா நாம் இருக்கிறோம்; என்று நம்மை நாமே கிள்ளிப்பார்த்து கொள்ள வேண்டியுள்ளது!!

இன்றைய ஊடகர்களின் மன நிலை, வெறும் TRP ரேட்டிங், புகழ், பணம் இவற்றை மட்டுமே பெரிதாக சிந்திக்கின்றது. ஓர் உயிரின் இறப்பைப் பற்றி எந்த மயிரும் கவலைப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஊடக மடையர்களை சிலர் விபச்சார ஊடகர்கள் என்றே அழைக்கின்றனர், உண்மையில் இவர்கள் அதையும் தாண்டி கேவலமானவர்கள். மது போதைக்கு அடிமையாகி தவறிழைப்பவன் எவ்வளவு குற்றவாளியோ, அதேபோல் பப்ளிசிட்டி போதைக்கு அடிமையாகி, மனசாட்சியே இல்லாமல் ஒருவன் துடிப்பதை படம்பிடிக்கும் மிருகங்களும் குற்றவாளிகளே; இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் இங்கு மட்டுமே நடக்கும்.
#மனிதர் நோக மனிதர் பார்க்கும் அவலம்!!

#ஆருத்ரன்^

எழுதியவர் : ஆருத்ரன்^ (23-Jan-14, 3:44 pm)
சேர்த்தது : ஆருத்ரன்
பார்வை : 2760

மேலே