சங்கிலி உடைக்க ஒன்றுபடு தமிழா

சிறைகொண்டத் தமிழினை
வதையுறும் தமிழர்தனை
விடுதலைக் கொள்ள
ஒன்றுபடு - தமிழா

சாதிச் சாக்காடு
மத மார்கமெல்லாம்
மண்ணோடு புதைய
நின்குலம் தழைக்க
நிமிர்ந்த நெஞ்சோடு
ஒன்றுபடு தமிழா

தின மழுதோம் திணை யிழந்தோம்
குடி கெட்டோம் குடியால் கெட்டோம்
தடி யிழந்தோம் தன்மான மிழந்தோம்
தனித் தனியாய்ப் பிரிந்தோம்

தெளிவாய்ப் பிரிக்கப்பட்டோம்
சங்கிலிப் பிணைக்கப்பட்டோம்
இப்பிணைப்பால் பிரிவினைப்
பாராட்டி தனித்தனியாய்க்
கட்டிப்புரண்டோம் தட்டிக்கேட்க
எவறுமில ரென்றேத்
தன்குஞ்சைத் தான்தின்னும்
அரவம்போல் ஆர்பரித்திருந்தோம்
அடிமை ஆனோம்...

சங்கிலி உடைக்க ஒன்றுபடு தமிழா.

எழுதியவர் : த.பிரவீன் ராசா (23-Jan-14, 4:01 pm)
சேர்த்தது : Praveen raja
பார்வை : 105

மேலே