ஏக்கத்தின் வெளிப்பாடு
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்களே மேலுடுப்பு கீழுடுப்பு எல்லாம்
மாற்றம் கண்டதுவே,
பயிர்ப்பு கற்றுத் தந்த தாவணி
அடங்கிப் போனதென்ன,
அச்சம் சொல்லித் தந்த பாவாடை
மடிந்து போனதென்ன,
வரம் வாங்கி வந்த சேலை
தரம் தாழ்ந்ததுவோ,
பெண்களே மேலுடுப்பு கீழுடுப்பு எல்லாம்
மாற்றம் கண்டதுவே,
அடக்குமுறையும் அல்ல ஆணாதிக்கமும் அல்ல
ஏக்கத்தின் வெளிப்பாடு...
- சு.சுடலைமணி