உன் நினைவுகள் என்னோடு
மழையின்போது வரும்
மண் வாசமாய்
என் மனதோடு
அன்று உறவாடினாய்.........
என் `தமிழ்` ரத்தமாய்
இன்பத்திலும்,துன்பத்திலும்
உடன் வருவேனென்று
காதோடு கானமிசைத்தாய்...
உன் அன்பில் எனைமறந்து
உற்சாக போதையிலிருக்க
எங்கிருந்தோ வந்த புயலால்
நட்பிலிருந்து விடுபட்டாய்...
வில்லெனும் என்னிதயத்திலிருந்து
விடுபட்ட பாணமாய்
உன் இலக்குத் தேடி
சொல்லாமல் போய்விட்டாய்...
நீ கொடுத்த ஞாபகப் புதையல்களில்
உன்னையும், என்னையும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்
நம் நட்பைத் தொலைத்துவிட்டு ....!!!