இதயம்

காதலின் தொடக்கம் கண்கள்.
சுகத்தின் தேடல் மனசு.
வலியின் சுகம் இதயம்.
கண்கள் மாறிவிடக்கூடும்,
தோற்ற மாற்றங்களில்
மனதும் தொலைந்துவிடக்கூடும்,
முகவரி மாற்றங்களில்
இதயம் மட்டும் மாற்றத்தையும்,
மாறுவதையும் ஏற்றுக்கொள்வதில்லை.

"இதயம்"

உருவத்தை ரசிக்கும் கண்கள் அல்ல!
கடலில் எழும்பும் அலைகள் அல்ல!
வாழ்க்கையின் தேடல்.
இதயத்தின் தேடல் உருகிய உயிர்!
இதயம் தேங்கிக் கிடக்கும் கடல் அல்ல,
மலைகளின் ஊற்றில் கசிந்து,
தேன்கீதம் பாடும் தென்றலில் கலந்து,
அரங்கேற்றம் தேடி ஓடும் நதி அல்லவா!!!!

எழுதியவர் : muthulatha (23-Jan-14, 9:58 pm)
Tanglish : ithayam
பார்வை : 435

மேலே