குறைகள் இல்லை என்னிடம்

உன்னை மயக்கி
அடைந்து கொள்ள
பொய் முகம் இல்லை என்னிடம்!
மற்றவர் பையில்
எடுத்துக் கொள்ள
கபடம் இல்லை என்னிடம்!
முகத்தைப் பார்த்து
இரந்து கேட்க
குறைகள் இல்லை என்னிடம்!
ஏழை துயர் நீக்க
அள்ளி இரைக்க
செல்வம் இல்லை என்னிடம்!
மடமை கொண்டோர்
அறியாமை போக்க
முதுமை இல்லை என்னிடம்!
அழகை ரசித்து
கலந்து பேச
தோழமை இல்லை என்னிடம்!
உரிமை வேண்டி
சேர்ந்து பேச
ஒற்றுமை இல்லை எம்மிடம்!
பண்பாய்ப் பேசி
பணிவை வேண்ட
உயர்வு இல்லை என்னிடம்!
பாவம் போக்க
புண்ணியம் செய்ய
புரிதல் இல்லை எம்மிடம்!
சிறுமை நீக்கி
பெருமை வேண்ட
பருவம் இல்லை என்னிடம்!