நெடுந்தூரம் போக வேண்டும் - மணியன்

கம்பன் ஷெல்லி
கை பிடித்து
கவி புனை பாரதி தோளமர்ந்து
கங்கை நதிக்கரை
கால் துளாவி
கானா உலகம் கண்டெடுக்க
நெடுந்தூரம் போக வேண்டும். . . .

அமராவதியை அரவணைத்து
மும்தாஜின் முதுகு தட்டி
லைலா கண்ணீர் தான் துடைத்து
கண்ணகி சிலம்பின் ஓசைகேட்டு
கவியுள கவிஞர்கள் மனம் தடவி
நெடுந்தூரம் போக வேண்டும். . . .

கண்கவர் சோலை வனமதிலே
காவிரி ஆற்றுப் படுகை தன்னில்
தேனிசை குயில்கள் கவிபாட
தென்றல் வந்து தாலாட்ட
தெம்மாங்கு தமிழ்ச் சுவை அருந்தி
தேவதை போல் இள மயில் ஆட
தேடியதெல்லாம் நனவாக
நெடுந்தூரம் போக வேண்டும். . .

கவிசேர் புலவர்கள்
கால் பிடித்து
கண்ணீர் மலர்கள் தான் தூவி
பொன்னான தமிழர் தான் வாழ
மண்ணாள செய்யும் வகை காண
பண்ணாக இசையும் தமிழ் கேட்டு
எந்நாளும் இதுவே தான் தொடர
நெடுந்தூரம் போக வேண்டும். . . .

இனியும் துன்பமே
இல்லா தொழிய
இனிமை எங்கும்
இரைந்தே செழிக்க
வளம் சேர் பாரத மணித்திரு நாடு
பொல்லாத கயவர்
நில்லாது விரட்டி
இல்லாமை இங்கு இல்லாது ஒழிந்து
நெடுந்தூரம் போக வேண்டும். . . . . .

எழுதியவர் : மல்லி மணியன் (23-Jan-14, 11:25 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 144

மேலே