வளர்ச்சி வீழ்ச்சி

ipad
android
note
galaxy
என
எத்தனையோ விதங்களில்
அலைபேசி வந்து
ஆனந்த கூத்தாடுகையில்

செல்போன் டவரால்
உயிரை பறிகொடுத்த
சிட்டு குருவிகளின்
புகைப்படங்கள் சொல்லியது

அலைபேசியால் அழிந்த
எங்கள் சிட்டுகுருவி
இனங்களின் நிலைதான்
நாளை உங்களுக்கு!

தயவு செய்து எங்களின்
புகைப்படங்களை
செல்போனில் இருந்து
அழித்து விடுங்கள்!

எங்களின் புகை படங்களாவது
செல்போன் தாக்குதலில் இருந்து
தப்பித்து கொள்ளட்டும!

எழுதியவர் : ந.சத்யா (23-Jan-14, 10:38 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : valarchi veelchi
பார்வை : 92

மேலே