முத்தம்

முத்தம் ஓன்று வேண்டும்
அதுவும் சத்தமாக வேண்டும்
முத்தம் பெற வேண்டும்
அதுவும் மொத்த மாக வேண்டும்
முத்தம் தரும் போது-அதில்
நீ இருக்க வேண்டும்
முத்தம் பெரும் எனக்குள்
நீ என்றும் உயிர் வாழ வேண்டும்
உந்தன் முத்தம் தித்திக்க வேண்டும்
நினைக்கும் போதெல்லாம் -என்னில்
நீ பத்திக்க வேண்டும் -அதை நான்
ஒத்திக்க வேண்டும்
இதயத்தை இதழ் வழியாக
ஊட்டி விட வேண்டும்
இமை மூடி அதை நான்
உறிஞ்சிக் கொண்டு
உள் வாங்க வேண்டும்
முத்தத்துக்கு மொழி இல்லை
இனமில்லை ஜாதி இல்லை
பரந்து விரிந்த இப் பூ உலகில்
முத்தம் தரவும் பெறவும்
எல்லை இல்லை ............!-அதனால்
மனிதர்களே....! மனிதர்களே .....!
மண்ணை முத்தமிடுவோம் ......!
மலர்களை முத்தமிடுவோம் .....!
மலைகளை முத்தமிடுவோம் ....!
மனிதர்களை முத்தமிடுவோம் ..!
மனிதங்களை முத்தமிடுவோம் ..!
முத்தமிட்டு பாருங்கள் -அதுவும்
சத்தமாக முத்தமிட்டு பாருங்கள்
அதில் இருவரின் ஆன்மா நிறைந்திருக்கும் ..!