கவி நாயகன்

என் நாயகன்
உள்ளத்தில்
உதயமாகி நின்ற
நாள் முதல்
என்னுடன் தோழிகள் ஆகியது
பேனையும் பேப்பரும்.
மையில் தீட்டப்பட்ட
வடிவம்
நாயகனின் நட்பில்
வரைந்ததே.
என்னை அவனுக்கு
பிடிக்காவிட்டலும்
பிடித்திருக்கும் என்னிடம்
பேசாமல் போவதில்
நியாயம் ஏதும்
உண்டோ ?
இப்போது என்னுடன்
இருக்கிறான்
இனியும் என்னுடன்
இருப்பான்.
அவனின் ஆயுள்
என் கை விரல்களுக்கு
இடையில்
பேனையின் ஆட்சி
இருக்கு மட்டும்
இருக்கும்.