ஏன் அழவில்லை

ஆண் மகன் விலை
ஏற்றம்!
கன்னிப் பெண் அழுகை!

கரை சேற முடியா அபலை
நிலை
அழுகின்றாள் பரிதாபம்!

பெண் பிள்ளை ஏக்க
முகம்
தந்தை முகம் சோகத்தில்

திருமணம் சொப்பணம்
அப்பெண்ணுக்கு
ஏங்கியே தவிக்கின்றாள்!

அபலை அவள் அவல நிலை
கண்டும்
ஏன் துடிக்கவில்லை மனித குலம்?

புது யுகம் காணும் இளைஞர்
உள்ளம்
ஏன் இதற்கு கொடி தூக்கவில்லை?

பெண்ணுரிமை பேசும் நவநாகரீக
நங்கைகள்
இந்நிலைக்கு ஏன் அழவில்லை?

வறுமை நிலை போக்க பல
இயக்கம்
சமாதானம் நிலைக்க பல
இயக்கம்

ஏன் துணை தேடித் தரும்
இயக்கம்
இன்னும் வரவில்லை?

எழுதியவர் : ஜவ்ஹர் (24-Jan-14, 10:18 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 88

மேலே