மூன்று ஆண்டு போதுமா - தென்றல்

திறந்து வைத்தேன் கதவை
தென்றல் வந்து செல்லட்டும் வரவாய்

வரும்போது சிறப்பொலியில் வியர்த்து
வாசல் வரை நுழைந்தது காற்று

காவல் கதவை குற்றமென திறந்து
கண்டு கொண்ட சட்டம் இ.த.ச 124 அ தெரிந்து

ஆட்சிக்கு துரோகம் செய்வதுதானே உன் ஆசை
அனைத்தும் அறிந்து மீற விடுவோமா டேய் மீசை

பிணையில் கூட விட முடியாத குற்றம்
பிழை செய்த கவியே உனக்கு சிறையே

மூன்று வருட சிறைவாசம் முழுதாய்
முடிந்தால் அபராதமும் சேருமே பழுதாய்

அல்லது ஆயுள் தண்டனை அதிகபட்சம் உண்டு
அதுபோல் அபராதம் மட்டும் கூட உண்டு

திறந்த பக்கம் மூடி வைத்து தெளிந்தேன்
தென்றல் தழுவும் உள்ளத்தோடு நெளிந்தேன்

சின்ன குறையாய் செய்த குற்றம் விசாரிப்பது எது
செஷன்ஸ் நீதிமன்றம் விசாரிக்கும் தெரிந்தேன்

கவிதையோடு சட்டம் கொஞ்சம் கலந்தேன்
கல்வியோடு மாற்றம் உணர்த்த புனைந்தேன்

* இ.த.ச 124 அ - இந்திய தண்டனை சட்டம் 124 அ

குறிப்பு : கன்னி முயற்சியிது கருத்துகள் சொன்னால் மேலும் தொடர்வேன்

எழுதியவர் : . ' .கவி (7-Feb-11, 11:11 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 370

மேலே