யுத்தம் செய்
உள் நாட்டு யுத்தம் நடக்குது பாரு
ஒரு சொட்டு இரத்தம் இல்லாமல் பேரு
எதிர்காலம் என்பது இழந்தது பல நூறு
இளைய தலைமுறையும் விழுந்தது சமர்கள கூறு
எத்தனை அழுதாலும் வற்றாது கண்ணீரு
இதுதான் தாய்மார்களின் தணியாது குடிநீரு
மட்டை பந்தின் பலமணி நேரலை செத்தது வரலாறு
பட்டை நெற்றியில் போடுவதுதானே பார்த்தவன் திருநீறு
குட்டை உடையில் ஆயுதங்கள் குவிப்பது யாரு
சட்டை சந்தியில் கிழிப்பது தானே விளம்பர நாரு
சின்ன திரையில் செத்தவனை சிறப்பினில் சேரு
செய்யும் தொழிலே எதிரிதெய்வம் அலைவரிசை பதினாறு
திரை துறையும் சொல்வதற்கில்லை திருந்தனும் ஊரு
தெரியுமா மக்களுக்கு இதுதானே உள்நாட்டு போரு