சுயரூபம்
தாலி கட்டும் வரை காத்திருந்தான்
கட்டியபின் அவிழ்த்துவிட்டான்
ஆடையல்ல
அவன் கட்டி வைத்த மூர்க்கமான
நாய்க் குணத்தை!
விடியும் வரை காத்திருந்தான்
விடிந்த பின்னே திறந்துவிட்டான்
கதவையல்ல
அவன் பூட்டிவைத்த சிறுமையான
நரிக் குணத்தை!
விருந்தினர்கள் போகும்வரை காத்திருந்தான்
போன பின்னே காட்டிவிட்டான்
அன்பளிப்பையல்ல
அவன் உள்ளத்தில் அடக்கிவைத்த
துர்க் குணத்தை!
பிள்ளை பிறக்கும்வரை காத்திருந்தான்
பிறந்தபின்னே மாறிவிட்டான்
படுக்கையல்ல
வேறு பெண் சகவாசம் கொள்ளும்
மிருகக் குணத்துக்கு!!

