அழைப்பிதழ்

-----==== அழைப்பிதழ் ====-----

நிகழும்
ஒவ்வொரு நாளும்
எமகண்ட நேரத்தில்
மரண யோகத்தில்
முன்னாள் எம தர்மனின்
முன்னிலையில்
ஒப்பாரிகள் பாட
தார தப்பட்டை முழங்க
குடிமக்களின் நடனம் தொடர
மரணத்தின் ஊர்வலம்
நடைபெறும்,,

தண்ணி அடித்துவிட்டு வண்டியில் செல்வோரும்,
தினம் தினம் குடித்துவிட்டு
கும்மாளம் அடிப்பவரும்,
புகைக்கு அடிமையாய்
புற்று நோய் பெற்றவர்களும்,
தலைகவசம் இல்லாமல்
தாறுமாறாய் வாகனம்
ஓட்டுபவர்களும்,
பொறுப்பில்லாமல் ஊர்
சுற்றுபர்களும்,
மற்றவர்களை ஏமாற்றும்
சுயநலவாதிகளும்

வருக வருக என
ஆவலுடன் வரவேற்கிறோம்

---------============++++++ இங்ஙனம் ++++------
ஆவலுடன்
எமதர்ம ராஜா - 1999875
இருவீட்டார் அழைப்பு
சொர்க்கம் - நரகம்

பின்குறிப்பு :-
வேகமாக வருபவர்களுக்கு
சொர்கத்திற்கு செல்ல பரிசீலிக்கப்படும்

எழுதியவர் : Amirthaa (25-Jan-14, 1:07 pm)
பார்வை : 445

மேலே