வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு
வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு
*********************************************
அடி மனதின் ஆழத்தில்
ரத்த நாளங்களின் ஓலத்தில்
அலையென ஆர்ப்பரிக்கும் கனவுகள்
காலக்கரைசலில் கம்பீரமாய் நனவாகும்!!.....
நன்னம்பிக்கை முனை தன்னம்பிக்கையால்
தலை சாய்ந்து உனை வரவேற்கும்!!......
வற்றிக் கிடந்த தேசம்
வள்ளுவனால் வளமானது!!...
பற்றி எரிந்த தேச பாசம்
மகாத்மாவால் சுதந்திரப் பயிரானது!!....
2020 - இல் இந்தியா வல்லரசு - செவ்வாய்த் தமிழன்
கலாமின் நிறைமாதக் கனவல்லவா!!....
வாய்ப்புகளை தன் வசப்படுத்திய
தமிழனின் புத்திக்கூர்மை தான்
உலகத்தின் வாழ்வாதாரம்!! -நம்புங்கள் நண்பர்களே!!
வாய்ப்புகள் தந்திடும் வளமான வாழ்வு!!......