56, பிடிக்கவில்லை என்றால் அழவேண்டும்

சொந்தக் கவிதை - 56


பிறந்தபோது முதலில் நான்அறிந்தஉண்மை
பிடிக்கவில்லை என்றால் அழவேண்டும்
கருவறையின் சுகம் மாறியதும் அழுதேன்
குழந்தையாயிருந்தபோது பாலுக்காக அழுதேன்
சிறுவனாயிருந்தபோது பொம்மைக்காக அழுதேன்
பள்ளிக்குச்சென்றபோது படிக்கவேண்டுமென அழுதேன்
கல்லூரிக்குச்சென்றபோது கையில் பணமில்லையென அழுதேன்
வேலைக்குச்சென்றபோது வாகனமில்லையென அழுதேன்
திருமணம்நடந்தபோது பணக்காரக்குடும்பமில்லையென அழுதேன்
உத்தியோகத்தில் பதவிஉயர்வு கிடைக்கவில்லையென அழுதேன்
குழந்தைகள்பிறந்தபோது எப்படி வளர்க்கப்போகிறோமென அழுதேன்
பள்ளிக்குச்செல்லும்நேரம் பள்ளிச்செலவுகளைஎண்ணி அழுதேன்
படித்துமுடித்ததும் வேலைகிடைக்கவேண்டுமென அழுதேன்
அவர்கள் திருமணவயதில் சரியானவாழ்க்கை
அமையவேண்டுமென இறைவனிடம் அழுதேன்
இத்தனை அழுகைக்குப்பிறகும் உண்மை
ஒன்றினை மறந்தேன் இல்லாதவைகளை
நினைத்து பயந்துஅழுத காலத்தைவிட
இருப்பதை நினைத்து சிரித்தக்காலம்குறைவென
அம்மா தூக்கிமுத்தமிட்டபோது கள்ளமில்லாமல்
பொக்கைவாயால் குலுங்கிச்சிரித்தேனே அதுஇப்போது
வாழ்வுமுடியும் நேரம் பொக்கைவாயானதும்
ஞாபகம்வந்து பயணம்தொடங்கியதுபோல் அழுகின்றேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Jan-14, 8:39 am)
பார்வை : 109

மேலே